கனிம வளத்துறை பட்ஜெட் அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, 27 ஜூலை (ஹி.ச) சென்னை தலைமைச் செயலகத்தில், கனிம வளத்துறை சார்பில் வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சர், துறைச் செயலாளர் உள
CM Joseph Vijay


சென்னை, 27 ஜூலை (ஹி.ச)

சென்னை தலைமைச் செயலகத்தில், கனிம வளத்துறை சார்பில் வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சர், துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். கனிம வளத்துறை மூலம் அரசின் வருவாயை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கனிம வளத்துறையின் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அதேபோல், சட்டவிரோத கனிமக் கொள்ளையை தடுப்பது, கனிம வளச்சுரண்டலை கட்டுப்படுத்தும் நடைமுறைகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள கனிம வளத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ