Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரை 20 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயிலைச் சேர்ந்த நிதிஷ்குமார் (18), பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவரும் அதே கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இன்று காலை இருவரும் ரயிலில் சென்னைக்கு வந்து, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 20 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இரு மாணவர்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியமேடு போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ