Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச)
பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி பி.டி. ஆஷா விசாரித்த இந்த வழக்கில், மனுதாரரை ஏழு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிமன்றம், நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தது.
மேலும், வழக்கு விசாரணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் ராமசந்திரனை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ