தமிழக அரசை விமர்சித்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல், 27 ஜூலை (ஹி.ச.) தமிழக அரசு குறுகிய காலத்தில் பெருமளவு கடன் வாங்கியிருப்பதாகக் கூறி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய ஆட்சியின்போது திமுக
லியோனி


திண்டுக்கல், 27 ஜூலை (ஹி.ச.)

தமிழக அரசு குறுகிய காலத்தில் பெருமளவு கடன் வாங்கியிருப்பதாகக் கூறி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முந்தைய ஆட்சியின்போது திமுக அரசு அதிகளவில் கடன் வாங்கி மக்களை கடன்காரர்களாக மாற்றிவிட்டது என்று விமர்சித்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே ₹20,881 கோடி கடன் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அது மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கர்நாடகாவில் தமிழ்நாடு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தமிழக முதல்வர் விஜய், அதற்கு பதிலாக வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஏமாற்றாதே, ஏமாற்றாதே, ஏமாறாதே, ஏமாறாதே… நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால், இங்கு நடப்பது நலமாய் நடந்துவிடும் என்ற பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டி தனது கருத்தை திண்டுக்கல் லியோனி பதிவு செய்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P