உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது வந்தே பாரத் ரயில் மோதி பலி
கள்ளக்குறிச்சி, 27 ஜூலை (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மேப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் (70) இன்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயில் எதிர்பாராத விதமா
உளுந்தூர்பேட்டை அருகே  தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது வந்தே பாரத் ரயில் மோதி பலி


கள்ளக்குறிச்சி, 27 ஜூலை (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மேப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் (70) இன்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயில் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பூங்காவனம் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள் வருவதை பொதுமக்கள் கவனிக்கத் தவறுவதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாகவும், எனவே தண்டவாளத்தை கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரயில்வே துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b