இலவச கண் பரிசோதனை முகாம் - பள்ளிமாணவர்கள்,பொதுமக்கள் பங்கேற்பு
திருவள்ளூர், 27 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூரில் அமைந்துள்ள வி.சுகுணம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி,எம்.என்.கண் மருத்துவமனை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச கண் பரிசோதனை முகாம
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச கண் பரிசோதனை முகாம் - பள்ளிமாணவர்கள்,பொதுமக்கள் பங்கேற்பு


திருவள்ளூர், 27 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூரில் அமைந்துள்ள வி.சுகுணம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி,எம்.என்.கண் மருத்துவமனை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் கண் பரிசோதனை, கண் நோய் விழிப்புணர்வு மற்றும் தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சமூக நலனை முன்னிறுத்தும் இந்த முயற்சிக்கு பொது மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து வி.சுகுணம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் கூறுகையில்,

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச கண் பரிசோதனை முகாமில் பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.

பள்ளியைச்சுற்றி 5 கி.மீ சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்று கூறினார்.

முகாமில் பங்கெடுத்த மருத்துவர் கூறுகையில்,

செல்போன் பயன்பாடு நம் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது.

பள்ளிக்குழந்தைகள் விளையாடுவது மட்டுமல்லாமல் வீட்டுப் பாடங்களை கூட செல்போனில் செய்கின்றனர்.

எனவே செல்போன் பயன்பாட்டை தவிர்க்க முடியாது.

அதற்கு மாற்றாக 20-20 விதிமுறையை பயன்படுத்தலாம்.

20 நிமிடங்கள் தொடர்ந்து செல்போன் பார்ப்பவர்கள் அடுத்த 20 நிமிடங்கள் கண்களை சிமிட்டி ஒய்வு கொடுக்க வேண்டும்.

சர்க்கரை வியாதி அல்லாத நபர்களுக்கும் கண்புரை நோய் ஏற்படுகிறது.

நமது தலைமுடி நரைப்பதைப் போல் கண் கருவிழி லென்சிலும் தேய்மானம் ஏற்படும். எனவே இவற்றை முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்படும் சோம்பேறிக்கண், மாறுகண் போன்ற குறைப்பாடுகளை முன்கூட்டியே கண்டறிய இதுபோன்ற பரிசோதனைகள் தீர்வாக அமைகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b