திருட்டுத்தனமாக வெளியான 'ஜனநாயகன்' படம் பார்த்தவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது - சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, 27 ஜூலை (ஹி.ச) திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ''ஜனநாயகன்'' திரைப்படத்தை பார்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். பிரதீப்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிப
Jananayakan


சென்னை, 27 ஜூலை (ஹி.ச)

திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படத்தை பார்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். பிரதீப்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட தன் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஆர். பிரதீப்குமார் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி. குமரப்பன், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட திரைப்படத்தை பார்த்தார் என்பதைத் தவிர மனுதாரர் மீது வேறு எந்தக் கடுமையான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மனுதாரர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 ஆயிரத்திற்கான இரு நபர் உத்தரவாதப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேலும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் முன்பு 15 நாட்கள் தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ