காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து
சென்னை, 27 ஜூலை (ஹி.ச.) ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வ
Raja


CM Joseph Vijay


சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் ₹30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும் என்றும், அவர் மேலும் பல சாதனைகள் படைத்து இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ