Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 27 ஜூலை (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர் நோன்பு திடல் நடுத் தெரு, பி.ஏ. எல் வீதியில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காரைக்குடி பி.ஏ. எல் வீதியில் வசித்து வரும் சத்ய நாராயணா என்பவர் தற்போது சென்னையில் உள்ள நிலையில், அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
வீட்டின் உரிமையாளர் சத்தியநாராயணன் தற்போது சென்னையில் உள்ளதால், அவர் காரைக்குடி திரும்பிய பிறகே கொள்ளையடிக்கப்பட்ட வைரங்கள், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தின் துல்லியமான மதிப்பு மற்றும் விவரங்கள் தெரியவரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN