காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ரூ.1 கோடியே 8 லட்சம் நன்கொடை வழங்கிய கோவில் அறங்காவலர் குழு தலைவர்
தென்காசி, 27 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திருத்தளமான தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள இரண்டு தேர்களில் அம்பாள் தேரானது பயன்படுத்த முடியாத சூழலில் சிதலமடைந்து காணப்பட்டு வரும் நிலையில், அம்ப
Kasi Vishwanathar Temple


தென்காசி, 27 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திருத்தளமான தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள இரண்டு தேர்களில் அம்பாள் தேரானது பயன்படுத்த முடியாத சூழலில் சிதலமடைந்து காணப்பட்டு வரும் நிலையில், அம்பாள் தேரினை புதியதாக செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் இந்த தேரினை செய்ய தேவையான முழு பணத்தையும் நன்கொடையாக அளிக்க உள்ள நிலையில், சுமார் 35 அடி உயரம் 11 அடி அகலம் கொண்ட இந்த தேரினை செய்ய தற்போது ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை முழுவதுமாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில், இந்த தேரினை செய்யும் பணியானது இன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN