Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
சிவசேனா (UBT) கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்கு அரசியல் பிரமுகர்களும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உத்தவ் தாக்கரேவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
சிவசேனாUBT கட்சியின் தலைவர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
நேற்று சிவாஜி பூங்காவில் வெளிப்பட்ட அபாரமான ஆதரவு, உங்களை பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும், உங்களுக்குத் துணையாக நிற்கும் மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
உங்கள் தளராத போராட்டக் குணத்துடன் சவால்களை முறியடித்து, நீங்கள் நல்ல உடல்நலத்துடனும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b