கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி - மீராபாய் சானு, ராஜா முத்துப்பாண்டிக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து
சென்னை, 27 ஜூலை (ஹி.ச.) கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை மீராபாய் சானு மற்றும் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மா
மாணிக்கம்


சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை மீராபாய் சானு மற்றும் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில்,

இந்திய விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான மீராபாய் சானு பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டினார்.

மேலும், தமிழகத்தின் பெருமையான ராஜா முத்துப்பாண்டி, ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்திருப்பது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை அளிப்பதாக குறிப்பிட்டார்.

இரு வீரர்களின் இந்த மகத்தான வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், அவர்களின் வெற்றிப் பயணம் தொடர்ந்தும் இந்தியாவிற்கு மேலும் பல சர்வதேச வெற்றிகளையும் பெருமைகளையும் பெற்றுத் தர வேண்டும் என்று தனது பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P