ரெயில் ஏசி பெட்டியில் 40 கிலோ கஞ்சா கடத்தல் - துப்பாக்கியுடன் 4 பேர் கைது
திருப்பூர், 27 ஜூலை (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரெயில் மூலம் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சாவுடன் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் சம்பவம
Palladam Police Station


திருப்பூர், 27 ஜூலை (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரெயில் மூலம் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கஞ்சாவுடன் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயிலின் ஏசி பெட்டியில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிர்துன்ஜெயா ரானா (26), நிரோட் பாக் (24), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28), சூர்யகாந்த் தாஸ் (25) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 40 கிலோ கஞ்சாவுடன் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருளுடன் துப்பாக்கியும் வைத்திருந்தது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா எந்த இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது, யாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது, இதன் பின்னணியில் செயல்பட்ட கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN