சென்னை அருகே தனியார் ஸ்டீல் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.18.80 லட்சம் வழிப்பறி
சென்னை, 27 ஜூலை (ஹி.ச.) சென்னையில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ரஞ்சித் குமார் நிறுவனப் பணிக்காக ரூபாய் 18 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது க
சென்னை அருகே  தனியார் ஸ்டீல் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.18.80 லட்சம் வழிப்பறி


சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)

சென்னையில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ரஞ்சித் குமார் நிறுவனப் பணிக்காக ரூபாய் 18 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கொரட்டூர் அருகே அவரை பின்தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், ரஞ்சித் குமாரின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளது.

தொடர்ந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.18.80 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் குமார், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மர்ம கும்பல் கத்திமுனையில் ரூ.18.80 லட்சத்தை வழிப்பறி செய்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b