ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
சென்னை, 27 ஜூலை (ஹி.ச.) ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு
Sagayam


சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி, பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி சகாயம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, பாதுகாப்பு வழங்குவது தொடர்பான மனு மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ