Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 27 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் நேற்று சட்டவிரோதமாக தோட்டத்தில் தகர ஷெட் அமைத்து பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கீழ திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆபத்து விளைவிக்கும் வகையில் வெடி மருந்துகளை கையாளுதல், கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், விபத்தில் உயிரிழந்த ராம்பிரகாஷ், ராமச்சந்திரன், இன்னாசிமுத்து, ஐயப்பராஜா, பாண்டித்துரை ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam