ராணிப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து - கூலி வேலைக்கு சென்ற 12 பேர் படுகாயம்
ராணிப்பேட்டை, 27 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் 12 பேர் இன்று காலை வழக்கம் போல் கூலி வேலைக்காக வேனில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். வேன் பாணாவரம் - சோளிங்கர் சாலையில் காவேரிப
ராணிப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து - கூலி வேலைக்கு சென்ற 12 பேர் படுகாயம்


ராணிப்பேட்டை, 27 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் 12 பேர் இன்று காலை வழக்கம் போல் கூலி வேலைக்காக வேனில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

வேன் பாணாவரம் - சோளிங்கர் சாலையில் காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 12 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வேனின் அதிவேகம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b