Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 27 ஜூலை (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது, பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் உழவர் சந்தை மற்றும் முக்கிய காய்கறி சந்தைகளில் கத்திரிக்காய், மாங்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி இதுவரை ஒரு கிலோ 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மாங்காய் தற்போது ஒரு கிலோ 30 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதேபோல், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முட்டைகோஸின் விலை தற்போது 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. சமையலுக்கு அத்தியாவசியமான ஒரு கட்டு புதினா 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை இரண்டு மடங்காக உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை பற்றாக்குறை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறி வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த திடீர் விலை உயர்வால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் காய்கறிகள் வாங்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b