Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த குமார்(வயது 67) - கோடீஸ்வரி தம்பதியினர் தங்கள் வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு அந்த வளர்ப்பு நாய் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த உமாராணி(40) என்பவரை திடீரென தாக்கி கடித்துள்ளது. இதில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த உமாராணியை அவரது தங்கை கற்பகம் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். உமாராணி தனியார் மருத்துவமனையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், வளர்ப்பு நாயை முறையாக கட்டுப்படுத்தத் தவறியதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்ததாகவும் கூறி, அதன் உரிமையாளர்களான குமார் மற்றும் கோடீஸ்வரி தம்பதியினர் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b