போராட்டம் அல்ல நன்றி பேரணி -ஒய்.எஸ்.ஆர்.சி.பிக்கு நாரா லோகேஷ் பதிலடி
அமராவதி , 28 ஜூலை (ஹி.ச.) ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தனது பெனமலூரு பயணத்தின்போது அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு கடும் பதிலடி அளித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளிய
A


அமராவதி , 28 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தனது பெனமலூரு பயணத்தின்போது அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு கடும் பதிலடி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தவில்லை. கூட்டணி அரசு அங்கன்வாடி பணியாளர்களின் குழந்தைகளுக்கும் ‘தல்லிக்கு வந்தனம்’ திட்டத்தின் பயனை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் பேரணியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆட்சியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ‘அம்மா ஒடி’ திட்டத்தின் பலன் மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது. தற்போது அவர்களின் குழந்தைகளுக்கும் நலத்திட்ட உதவி கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை, எதிர்க்கட்சியினர் தங்களது தவறான பிரசாரத்தால் போராட்டமாக சித்தரிக்கின்றனர். இது போலி செய்தி பரப்பும் முயற்சி.

மக்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் அரசு நன்மை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இதுபோன்ற பொய்யான தகவல்களை எதிர்க்கட்சியினர் பரப்புகின்றனர்.

இவ்வாறு நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA