ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா மனு - வாக்காளர் கீதா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 28 ஜூலை (ஹி.ச) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. இளையராஜாவின் தேர்தலை எதிர்த்து, தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எ
Ilaya


சென்னை, 28 ஜூலை (ஹி.ச)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. இளையராஜாவின் தேர்தலை எதிர்த்து, தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எம்.எல்.ஏ. இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, இளையராஜா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு வாக்காளர் கீதா பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ