முதலமைச்சர் விஜய் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை ஆய்வுக் கூட்டம்
சென்னை, 28 ஜூலை (ஹி.ச) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்
CM Joseph Vijay


சென்னை, 28 ஜூலை (ஹி.ச)

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, நிதித்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான நீண்டகால செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், புதிதாக தொடங்கப்படும் சிறு உற்பத்தி நிறுவனங்களுக்கு தொழில் முதலீட்டு மானியம் வழங்குவது, காப்புரிமை, வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடு (GI) பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட அம்சங்களும் விவாதிக்கப்படுகின்றன.

தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களை வலுப்படுத்துதல், நிதி நெருக்கடியில் உள்ள MSME நிறுவனங்களுக்கு மாநில கடன் உத்தரவாத நிதி வழங்குதல், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் பிணையில்லா கடன் வழங்குதல் மற்றும் சிறிய நகரங்களில் மைக்ரோ டெக் பார்க் அமைப்பது உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ