அரக்கோணத்தில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கோரி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனுத்தாக்கல்
அரக்கோணம், 28 ஜூலை (ஹி.ச.) அரக்கோணம் பகுதியில் பணிபுரியும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள் கூட்டாக இன்று காவல் துணை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தனர். அப்போது அரக்கோணத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் செய
அரக்கோணத்தில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கோரி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனுத்தாக்கல்


அரக்கோணம், 28 ஜூலை (ஹி.ச.)

அரக்கோணம் பகுதியில் பணிபுரியும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள் கூட்டாக இன்று காவல் துணை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தனர்.

அப்போது அரக்கோணத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

செய்தி சேகரிக்கச் செல்லும் இடங்களில் செய்தியாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் குறித்து எடுத்துரைத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பொதுமக்களுக்கு உண்மைச் செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், பணிக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b