டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
புதுடெல்லி, 28 ஜூலை (ஹி.ச.) புதுடெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு , கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மத்திய அரசின் முக
Consultative meeting of NDA MPs


புதுடெல்லி, 28 ஜூலை (ஹி.ச.)

புதுடெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு , கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மத்திய அரசின் முக்கிய மசோதாக்கள் மற்றும் வரவிருக்கும் அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜி.எம்.சி. பாலயோகி அரங்கத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.

கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிதாக உருவாகியுள்ள NCPI கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தேசிய அளவில் கூட்டணி விரிவாக்கத்திற்கான முயற்சி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b