டிஆர்டிஓ தரவு கசிவு குறித்து மத்திய அரசை விமர்சித்த மாணிக்கம் தாகூர்
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தொடர்பான தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலைக் குறிப்பிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர
மாணிக்கம்


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தொடர்பான தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலைக் குறிப்பிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

டிஆர்டிஓ-வின் 31 ஜி.பி. அளவிலான இராணுவத் தரவுகள் மற்றும் விஞ்ஞானிகளின் கையொப்பங்கள் டார்க் வெப்பில் $8,000-க்கு விற்பனைக்கு இருப்பதாகவும், இதுகுறித்து Alibi Global நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

NEET, NET தேர்வுகளில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட ஆட்சியில், தற்போது தேசிய பாதுகாப்பு தொடர்பான தரவுகளும் கசிவது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துவரும் நிலையில், தீவிரமான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும், நாட்டின் முக்கிய இராணுவ ரகசியங்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வரும் நிலைக்கு யார் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P