Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P