ஜனநாயகன் படத்தில் பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன - வழக்கறிஞர் வித்தியாசாகர் பேட்டி
மதுரை, 28 ஜூலை (ஹி.ச.) ஜனநாயகன் படத்தின் காட்சிகள் தொடர்பான ஆட்சேபனைகளை ஆய்வு செய்து சான்றிதழை மறுபரிசீலனை செய்யவும், இனி திரையிடப்படும் போது அந்த காட்சிகளை நீக்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக தணிக்கை வாரிய தலைவர், ஜனநாயகம் திரைப்படத்தின் த
Jananayagan


மதுரை, 28 ஜூலை (ஹி.ச.)

ஜனநாயகன் படத்தின் காட்சிகள் தொடர்பான ஆட்சேபனைகளை ஆய்வு செய்து சான்றிதழை மறுபரிசீலனை செய்யவும், இனி திரையிடப்படும் போது அந்த காட்சிகளை நீக்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக தணிக்கை வாரிய தலைவர், ஜனநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் வித்தியாசாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்துள்ள கடந்த 23ஆம் தேதி வெளியான திரைப்படத்தின் முதல் காட்சி , கிராம மக்கள் மூன்று முறை தொடர்ந்து தேர்தலை

புறக்கணிப்பதாகவும்,இன்னும் மக்கள் ஓட்டு போட வரவில்லை என பாப்பாபட்டி கிராம மக்கள் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

பாப்பாபட்டி கிராம மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட்டு உள்ளார்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அந்த கிராம மக்கள் எந்த வகையிலும் செயல்படவில்லை.

சமூக வலைதளங்களில் ஏற்கனவே இந்த படம் வெளியான போது உங்கள் கிராமத்தைப் பற்றி காட்சிகள் வந்துள்ளது என கூறினார்கள்.

அதன் அடிப்படையில் அப்போதைய நடிகரும் இப்போதைய தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களுக்கு மனு அனுப்பி இருந்தார்.

தேர்தல் புறக்கணிப்பு மீறி வாக்களிக்க சென்று அவர்கள் கை கால்கள் வெட்டப்பட்டு , ஊனமாக்குவது போன்ற காட்சிகளையும் பள்ளி குழந்தைகள் நாங்கள் வாக்களிக்க சென்றால் தாக்குதல் நடத்துவதாக காட்சிகள் பதிவாகியுள்ளது.

தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை அன்றைய காலகட்டத்தில் எங்களுடன் தான் இருந்தார்கள்.

சட்டப் போராட்டம் மட்டுமே நடத்தினார்கள், வன்முறையில் பாப்பாபட்டி கிராம மக்கள் ஈடுபடவில்லை.

தேர்தல்கள் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதற்கான காரணமாக ஜனநாயகன் திரைப்படத்தில் காட்டும் காட்சிகள் தவறானவை என கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஜாதி பிரச்சனை காரணமாக பாப்பாபட்டி கிராமத்தில் இதுபோன்று நடக்கிறது என காட்சிகள் பதிவாகியுள்ளது.

எங்களது மனு மீது உரிய விசாரணை செய்து அதற்கான பதில் கூட அளிக்காமல் மத்திய தணிக்கை துறை இந்த படம் வழியாக தணிக்கை சான்றிதழ் வழங்கி உள்ளது.

மத்திய அரசு வழக்கறிஞர் , ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பம்பட்டி என்று தான் வருகிறது பாப்பாபட்டி என வரவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கிராம மக்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் திரையிடப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பாப்பாபட்டி கிராம மக்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான எந்த ஒரு வழக்கு சான்றோ இல்லாத நிலையில் திரைப்படங்களில் வேண்டுமென்று பாப்பாபட்டி கிராமத்தை அவதூறு பாடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN