காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டி ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர்
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டி ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்துகிறேன்.

சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b