காவிரி நீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் விஜய் என்னை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார் - டி.கே. சிவக்குமார்
புதுடெல்லி , 28 ஜூலை (ஹி.ச.) கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது, இந்த ஆண்டு நாட்டில் வறட்சி ஏற்ப
A


புதுடெல்லி , 28 ஜூலை (ஹி.ச.)

கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது, இந்த ஆண்டு நாட்டில் வறட்சி ஏற்படும் சூழல் நிலவக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், மாநில அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால் அவற்றுக்கு விரைவில் அனுமதி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கிருஷ்ணா, தென்பெண்ணை, காவிரி, கோதாவரி ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு கர்நாடகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தம்மை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

மேகதாது அணை திட்டம் குறித்து பேசிய அவர், கர்நாடக எல்லைக்குள் அணை கட்டுவதற்கு வேறு எந்த மாநிலத்தின் அனுமதியும் தேவையில்லை என்றும், இதற்கு தமிழ்நாடு ஆட்சேபனை தெரிவிக்க உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு,

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்திய மந்திரி பதிலளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்காக மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA