கனிமவள தடையை நீக்க வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்
சென்னை , 28 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழக அரசு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படு
A


சென்னை , 28 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழக அரசு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தமிழகத்தில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், மாநிலத்தின் உள்நாட்டு தேவையை தங்கு தடையின்றி பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமிழக முதல்-அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழக அரசின் இந்த உத்தரவால் கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய உள்கட்டமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்வதற்கான தடையை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA