அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு அமைச்சர் கீர்த்தனா அழைப்பு
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) சிவகாசியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை அறிவித்ததுடன், சட்டவிரோதமாக
Keerthana


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

சிவகாசியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை அறிவித்ததுடன், சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளப் பதிவில்,

விருதுநகர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, அனுமதியின்றி மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு நடைபெறுவது குறித்து தகவல் அறிந்தால், பொதுமக்கள் 96009 69100 என்ற பிரத்யேக கைபேசி எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ