கரூர் விவகாரத்தில் அரசுப்பணி அறிவிப்பை முன்கூட்டியே ஆராய்ந்திருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) சென்னையில் நடைபெற்ற குரு ரவிதாஸ் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவது தொடர்பான அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை
Nainar


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

சென்னையில் நடைபெற்ற குரு ரவிதாஸ் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவது தொடர்பான அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், 15-ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கும் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நாம் எதுவும் பேசக் கூடாது என்றார்.

அதே நேரத்தில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் அரசுப்பணி வழங்கும் முடிவை எடுப்பதற்கு முன்பாக அனைத்து சட்ட அம்சங்களையும் ஆராய்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு ஆராயாமல் முடிவு எடுத்ததன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இந்தச் சூழல் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ