Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 28 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளைச் சீரமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதிகளை அளித்து பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோ குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோ சிறிது நேரம் திடீரென நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த மெட்டா நிறுவனம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாக தெரிவித்ததுடன், ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தது.
மேலும், இது செயல்பாட்டுப் பிழையால் ஏற்பட்ட சம்பவம் என்றும், வீடியோ உடனடியாக மீண்டும் பேஸ்புக்கில் வழக்கம்போல் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் சர்வதேச அதிகாரியிடம் விளக்கம் கேட்க மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA