திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி ஒருவர் பலி - இளம்பெண் படுகாயம்
திருப்பூர், 28 ஜூலை (ஹி.ச.) திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது, பின்னால் அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அசோக் கு
திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி ஒருவர் பலி - இளம்பெண் படுகாயம்


திருப்பூர், 28 ஜூலை (ஹி.ச.)

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது, பின்னால் அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அசோக் குமார்

(வயது 45) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் சென்ற அக்ஷயா (வயது 20) என்ற இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கல்லூரி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b