சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு - நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன், சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது வழ
சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு - நீதிமன்றத்தில் இன்று விசாரணை


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன், சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கைது நடவடிக்கை மற்றும் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மற்றும் விடுதலை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தரப்பு வாதம் முழுமையாக நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில் மார்க்கண்டேயன் தரப்பு வாதங்கள் நிறைவடைந்து அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்து தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b