வினாத்தாள் கசிவு விவகாரம் - மத்திய அரசை விமர்சித்த மாணிக்கம் தாகூர்
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ
மாணிக்கம்


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பினால், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா பதிலளிக்க முன்வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், வினாத்தாள் கசிவு சம்பவங்கள் பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், மாணவர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தேசிய அளவில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பின்னரும், அவரை பா.ஜ.க. நாடாளுமன்ற வளாகத்தில் பாராட்டியது ஏற்க முடியாதது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPSC) மற்றும் குஜராத்தில் நடைபெற்ற BAMS தேர்வு உள்ளிட்ட புதிய வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து பதிலளிக்காமல், பிறர் மீது பழி சுமத்தி பா.ஜ.க. தப்ப முடியாது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P