Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 28 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மகுடஞ்சாவடியை சேர்ந்த மோகன் என்ற இளைஞர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சங்ககிரி மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மோகனை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பெண்கள் தங்கள் கைபேசியில் 'காவலன் SOS' செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
ஆபத்தான காலங்களில் இதன் மூலம் போலீசாரை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b