ஸ்டான்லி மருத்துவமனையில் உடல்கள் மாற்றி ஒப்படைப்பு- தடயவியல் மருத்துவருக்கு மெமோ, விசாரணைக்கு உத்தரவு
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த இரு பெண்களின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பவத்தன்று பணியில் இருந்
ஸ்டான்லி மருத்துவமனை


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த இரு பெண்களின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பவத்தன்று பணியில் இருந்த தடயவியல் துறை உதவி பேராசிரியருக்கு மருத்துவமனை முதல்வர் மெமோ வழங்கி விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உடல்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை முடிவில் அறிக்கை தயாரித்து மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஏற்பட்ட இந்த தவறு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam