சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை சோளிங்கர் த.வெ.க எம்.எல்.ஏ கபில் கடுமையாக தாக்கிய சம்பவம்
இராணிப்பேட்டை, 28 ஜூலை (ஹி.ச) இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை பகுதியில் அமைந்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பக்கத்தில் கட்சி ரீதியாக அங்கிருந்த கடைக்குள் சட்டமன்ற உறுப்பினர் அவருடைய குழுக்கள் அத்துமீறி உள்
க


இராணிப்பேட்டை, 28 ஜூலை (ஹி.ச)

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை பகுதியில் அமைந்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பக்கத்தில் கட்சி ரீதியாக அங்கிருந்த கடைக்குள் சட்டமன்ற உறுப்பினர் அவருடைய குழுக்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தமிழக வெற்றிக்கழகம் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கபீல் மற்றும் அவருடைய தம்பி மற்றும் உள்ளிட்ட அவருடைய குழுக்கள் பிரச்சனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இதனை செய்தியாக சேகரிக்க சென்ற சோளிங்கர் செய்தியாளர் அரங்கநாதனை கடுமையாக தாக்கியதோடு அவருடைய செல்போனை பிடுங்கி அதில் ஆதாரமாக இருந்த வீடியோக்களை டெலிட் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்..

இதற்கு சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் என்பவர் சட்டமன்ற உறுப்பினருக்கு சாதகமாக செயல்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உறவினர்கள் ஆகியோர் கூச்சலிட்டதின் பேரில் அவரை அங்கிருந்து விடுவித்து தற்போது சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு செய்தியாளரை தாக்கிய ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கபில் மற்றும் அவருடைய குழுக்களை கைது செய்ய வேண்டுமென தெரிவித்து பாதிக்கப்பட்ட செய்தியாளரின் சக செய்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b