Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை , 28 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் வில்லாபுரம் இந்திரா நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவர் தோட்டத்தில் நேற்று மாலை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது.
இதை பார்த்த தர்மராஜ் மதுரை திருநகர் சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவித்தனர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இரண்டு பாம்புகள் நடனம் ஆடியதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பொது மக்கள் அதிகம் நடமாடக்கூடிய அப்பகுதியான இந்திரா நகர் தொகுதி பொதுமக்கள் இருப்பதையும் கண்டு கொள்ளாமல் நடனம் ஆடியது மேக் பாபு வருவதற்குள் ஒரு பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது.
எனினும் ஒரு பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் பாபு கொண்டுவிட்டார்.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று நடனம் ஆடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA