மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் - நெல்லை தவெக எம்.எல்.ஏ. ஆர்.எஸ். முருகன்
நெல்லை, 28 ஜூலை (ஹி.ச.) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் பட்டமளிப்பு விழா
முருகன்


நெல்லை, 28 ஜூலை (ஹி.ச.)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படாததை கண்டித்து, ஆளுநர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடையநல்லூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனும் இதே காரணத்தை சுட்டிக்காட்டி பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.

இதனால், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இதுவரை இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P