திருக்கோவிலூர் பகுதியில் துணிக்கடை, மளிகை கடைகளில் ஷெட்டரை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை
கள்ளக்குறிச்சி, 28 ஜூலை (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் கடை வீதியில் KPN எனும் மளிகை கடை இங்கி வருகிறது. இந்த கடையில் நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த 60 ஆயிரம் ரூபாய
Thirukovilur Police station


கள்ளக்குறிச்சி, 28 ஜூலை (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் கடை வீதியில் KPN எனும் மளிகை கடை இங்கி வருகிறது.

இந்த கடையில் நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அதேபோல சந்தைப்பேட்டை பகுதியில் கலைக்கல்லூரி எதிரே அமைந்துள்ள புயல் எனும் ஆண்களுக்கான துணிக்கடையின் ஷட்டரை கற்களால் உடைத்து உள்ளே இருந்த கண்ணாடி கதவையும் உடைத்து புகுந்த கொள்ளையர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஐந்து மூட்டைகளில் இருந்த புத்தாடைகள் மற்றும் கடைக்கு வைத்திருந்த CPU ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

முதலில் துணி கடைக்கு வந்த மர்ம நபர்கள் கடையில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர். அதன் பின்னர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மூன்று பெட்டிக்கடைகளில் இரண்டு கோவில்களில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அரங்கேறிய நிலையில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

தொடர்ந்து திருக்கோவிலூர் நகர் பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதற்கென தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN