Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஜூலை (ஹி.ச.)
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மனிதகுலத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இயற்கை வளங்கள் மனித வாழ்வின் அடித்தளமாகவும், மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விலைமதிப்பற்ற செல்வங்களாகவும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையைப் பாதுகாப்பது இன்றைய தேவையை மட்டும் பூர்த்தி செய்வதற்காக அல்ல; வருங்கால சந்ததியினருக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகை விட்டுச் செல்லும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் தலைமையிலும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலிலும், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளங்கள் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பேணிக் காக்கவும், பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தனது பதிவில் அழைப்பு விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P