Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ஆளுநரின் செயல்பாட்டுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமிழுக்கு எதிரான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பட்டமளிப்பு விழாவை தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் புறக்கணித்ததையும், அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் புறக்கணித்ததையும் வரவேற்றுள்ளார்.
ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தாய்மொழிக்கு உரிய முன்னுரிமை வழங்காமல் வந்தே மாதரம் மூலம் போலியான தேசபக்தியை திணிக்க முயல்வது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி, தமிழ்மொழிக்கான நிதி ஒதுக்கீடு, காவிரி நீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய பாஜக அரசு மவுனம் காத்து வருவதாகவும், இந்த சூழலில் வந்தே மாதரம் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு மற்றும் உணர்வுகளை புறக்கணிக்கும் ஆளுநர் மாளிகையின் செயல்பாடு தமிழர் விரோதமானது என்றும், அது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ