Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஜூலை (ஹி.ச.)
டெல்லி கீதா காலனி 2ஏ பிளாக்கில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் கூறுகையில்,
இந்த கட்டிடம் நீண்ட காலமாகவே சாய்ந்த நிலையில் தான் உள்ளது. இது தொடர்பாக பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று மேல் தளத்தில் இருந்து ஒரு பகுதி கீழே விழுந்தது.
கட்டிடத்தின் இந்த நிலைக்கு கட்டுமானம் செய்தவர்களே காரணம் . கட்டுமானம் செய்தவர்கள் முழு கட்டிடத்தையும் இடித்து புதிதாக கட்டவில்லை.
வெறுமனே மேல் தளங்களை மட்டும் கட்டி விற்றுவிட்டு சென்றுவிட்டனர். இப்போது அதை வாங்கியவர்கள் தான் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
என்று ராகேஷ் தெரிவித்தார்.
மற்றொரு குடியிருப்புவாசி கூறுகையில்,
சமீப காலமாக கட்டிடம் கணிசமாக சாய்ந்துள்ளது. இது குறித்து நாங்கள் முன்பே புகார் அளித்திருந்தோம். இங்கு அருகில் நிறைய பள்ளிகள் உள்ளன.
காலையில் குழந்தைகள் இந்த வழியாகத்தான் செல்கின்றனர்.
நாங்களும் தினமும் இந்த வழியைத்தான் பயன்படுத்துகிறோம். இந்த கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்று சொல்ல முடியாது. இன்று கட்டிடம் இன்னும் அதிகமாக சாய்ந்துள்ளது.
அதன் கோணம் திரிந்து காணப்படுகிறது. காவல்துறையினர் இதுவரை எதுவும் குறிப்பாக கூறவில்லை.
இரண்டாவது தளத்தில் ஒரு குடும்பம், ஒரு இளைஞரும் அவரது தாயும் இன்னும் அந்த கட்டிடத்தை காலி செய்யாமல் உள்ளனர்.
அவர்கள் இன்னும் அங்கேயே தான் இருக்கின்றனர். கட்டிடத்தின் கீழே ஆட்டோக்கள் நிறுத்தும் இடமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b