நல்லமலை காட்டில் புலியின் கர்ஜனை எப்போதும் தொடரும் - பவன் கல்யாண்
அமராவதி , 29 ஜூலை (ஹி.ச.) சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், வனத்துறை அமைச்சருமான பவன் கல்யாண், புலிகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தனது அறிக்கையில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் தெ
A


அமராவதி , 29 ஜூலை (ஹி.ச.)

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், வனத்துறை அமைச்சருமான பவன் கல்யாண், புலிகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தனது அறிக்கையில் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

நல்லமலை காடுகளில் புலிகளின் கர்ஜனை எப்போதும் தொடர வேண்டும் என்பதே ஆந்திர அரசின் முக்கிய இலக்கு.

புலிகள் பாதுகாப்பில் ஆந்திரப் பிரதேசத்தை நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக உருவாக்குவதற்கு கூட்டணி அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது.

புலிகள் பாதுகாப்பு என்பது வனங்களை மட்டுமல்லாமல், நீர்வளங்கள் மற்றும் எதிர்கால தலைமுறைகளின் இயற்கை வளங்களை பாதுகாப்பதாகும்.

கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மரபணு பல்வகைத் தன்மையை மேம்படுத்தவும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து 4 பெண் புலிகளை ஆந்திராவுக்கு கொண்டு வர மத்திய அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை ஆந்திர மாநில புலிகள் பாதுகாப்பு வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்றும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு நன்றி.

நாட்டின் மிகப்பெரிய புலிகள் காப்பகங்களில் ஒன்றான நாகார்ஜுனசாகர்-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தில் வேட்டையை தடுக்கும் முகாம்களின் எண்ணிக்கை

89-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்படும்.

இதன் மூலம் வனப்பகுதி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என்றும், சுமார் 800 பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகார்ஜுனசாகர்-ஸ்ரீசைலம் மற்றும் சேஷாசலம் வனப்பகுதிகளில் தற்போது 68 புலிகளும், 11 புலிக்குட்டிகளும் உள்ளதது.

புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளது.

கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு புலிகள் பாதுகாப்பில் அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ட்ரோன்கள், கேமரா கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நல்லமலை வனப்பகுதியில் காட்டெருமைகளை மீண்டும் கொண்டு வரும் நடவடிக்கைகளும், பாபிகொண்டலு வனப்பகுதியில் புலிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு பவன் கல்யாண் வாழ்த்துகள் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA