Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 29 ஜூலை (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஹால்ஸ் என்ற பெயரில் தனியார் மதுபான ஆலை ஒன்று நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், உற்பத்தி மற்றும் விற்பனையில் விதிமீறல்கள் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று அந்த மதுபான ஆலைக்குள் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஆலையின் மதுபான உற்பத்தி, இருப்பு விவரம், கணக்கு வழக்குகள், மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களிடமும், நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையின் முடிவில் தான் முறைகேடுகள் குறித்த முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b