அரிசிப் பையில் பச்சிளம் குழந்தையின் சடலம் - 22 வயது இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை
சென்னை, 29 ஜூலை (ஹி.ச) சென்னை கீழ்ப்பாக்கம், தியாகப்பா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் 10 கிலோ அரிசி பை ஒன்று நேற்று கிடந்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடு, அந்த பையை இழுத்து சாலையோரத்தில் போட்டது. இதை நேற
அரிசிப் பையில் பச்சிளம் குழந்தையின் சடலம் - 22 வயது இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை


சென்னை, 29 ஜூலை (ஹி.ச)

சென்னை கீழ்ப்பாக்கம், தியாகப்பா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் 10 கிலோ அரிசி பை ஒன்று நேற்று கிடந்தது.

அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடு, அந்த பையை இழுத்து சாலையோரத்தில் போட்டது. இதை நேற்று பிற்பகல் 3:45 மணியளவில் கவனித்த பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது, பைக்குள் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் உயிரிழந்த நிலையில் இருந்தது, கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கர்ப்பமாக இருந்ததை மறைத்து வைத்திருந்ததாகவும், தனிமையில் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தை இறந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் குழந்தையின் சடலத்தை அரிசிப் பையில் வைத்து வீசியதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் மரணத்திற்கான முழு காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b