காவிரி தண்ணீர் திறக்க இயலாது – டி.கே. சிவக்குமார் திட்டவட்டம்
புதுடெல்லி, 29 ஜூலை (ஹி.ச.) காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக
விஜய் சிவக்குமார்


புதுடெல்லி, 29 ஜூலை (ஹி.ச.)

காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தம்மிடம் தொலைபேசி மூலம் பேசியதாக கூறினார்.

மேலும், கர்நாடக மாநிலத்தின் நீர்நிலைகளின் தற்போதைய நிலையை நேரில் பார்வையிட தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்காக மேகதாது உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஹெலிகாப்டர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கர்நாடகத்தின் நீர்நிலைகள் மற்றும் நீர் இருப்பு குறித்து தமிழக முதலமைச்சருக்கு விரிவாக விளக்கமளிப்பதற்காக வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவும் தயாராக இருப்பதாக டி.கே. சிவக்குமார் கூறினார்.

எனினும், தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது என்ற கர்நாடக அரசின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P