Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஜூலை (ஹி.ச.)
மதுரை அழகர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில் இன்று திடீர் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேர் குறித்த நேரத்தில் புறப்படாமல் தாமதமானதால், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த தாமதத்திற்கு காரணம் முதல் மரியாதை பிரச்சனை என தகவல் வெளியாகியுள்ளது.
தேரோட்டத்தின் போது முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரண்டு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் தங்களுக்கே முதல் மரியாதை வழங்க வேண்டும் என பிடிவாதமாக இருந்ததால் தேர் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கோவில் திருவிழாக்களில் தனி நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக் கூடாது என நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி முதல் மரியாதை கோரி பிரச்சனை எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பிரச்சனையை தீர்க்க கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொதுவான ஒருவருக்கு பரிவட்டம் கட்டி தேரோட்டத்தை தொடங்கலாம் என ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேரோட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b